தீபாவளி ரிலீஸ் ரேசில் சேருமா கந்தசாமி?

விக்ரம், ஷ்ரியா நடிக்கும் படம் கந்தசாமி. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படம் விக்ரம் ரசிகர்களை பெறும் எதிர்பார்ப்புக்குள்ளாக்கி உள்ளது. கலைப்புலி தாணு தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கத்தில் அதிரடியாக உருவாகி வருகிறது கந்தசாமி. படத்துக்கு தேவி பிரசாத் இசை அமைக்கிறார் .
ஹாலிவுட் படத்துக்கு இணையாக இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. மெக்சிகோவில் மனத்தை கொள்ளை கொள்ளும் இதமான லொகேஷன்களில் பாடல் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. தீபாவளி ரேசில் கந்தசாமி இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரமின் எல்லாதரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இந்த படம் தயாரிக்கப்படுகிறது. எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தி சிறந்த படமாக உருவாக்கிவருகிறோம் என்று படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கூறினார்.
இந்த படத்துக்காக பிரசாத் ஸ்டூடியோவில் ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. இந்த செட்டில் 17 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் முக்கியமான அதிரடி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











