சிங்களத்துக்குப் போகும் காசி!

இப்போது இந்தப் படம் சிங்களத்தில் தயாராகிறது. நிரஞ்சன் என்ற சிங்கள் நடிகர் இந்தப் படம் பார்த்து அசந்து போய், தானே அதை சிங்கள மொழியில் தயாரித்து நடிப்பதாகக் கூறியுள்ளாராம்.
படத்தின் சிங்கள மொழி உரிமையை வாங்கிக் கொண்ட நிரஞ்சன், காஞ்சனா மென்டிஸ் மற்றும் சந்ரிகா என்ற இரு நடிகைகளை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
இப்படத்தின் தயாரிப்பாளர், ஹீரோவும் நிரஞ்சன்தான். இலங்கைத் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் இப்படத்திற்கு சூர்யா என பெயரிட்டுள்ளனர்.
இலங்கையின் கலாச்சாரம், பண்பாட்டுப் பின்னணியில் படத்தை உருவாக்குகிறாராம் நிரஞ்சன். வருகிற தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யும் திட்டம் உள்ளதாம்
விக்ரம் அளவுக்கு தன்னால் நடிக்க முடியுமா என்பதில் சந்தேகம் இருந்தாலும், அந்தக் கதையை கெடுக்காமல் நடிப்பேன் என்று கூறியுள்ளார் நிரஞ்சன்.
Comments


Click it and Unblock the Notifications