கோலிவுட்டை பன்றிக்காய்ச்சல் படுத்தும் பாடு!

By Staff

Sameera Reddy
பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குமோ என்ற அச்சம் காரணமாக வெளிநாடுகளில் நடக்கவிருந்த பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் நடிகைகள் வெளியில் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

அசல் படப்பிடிப்புக்காக ஏற்கெனவே மலேஷியா - சிங்கப்பூர் சென்று வந்தனர் சரண் மற்றும் குழுவினர். அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக பல வெளிநாடுகளுக்குப் போகத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பன்றிக்காய்ச்சல் பயம் காரணமாக இப்போது அடியோடு அந்த திட்டத்தையே ரத்து செய்துவிட்டனர்.

அதேபோல, விஜய் படத்தின் ஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டிருந்தவர்கள் இப்போது அந்த எண்ணத்தையே கைவிட்டுவிட்டனராம்.

தென்னமெரிக்காவில் நடக்கவிருந்த த்ரிஷா நடிக்கும் சங்கம் படப்பிடிப்பும் ரத்தாகிவிட்டது.

வெளிநாட்டுப் படப்பிடிப்புகள் ரத்து ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் வட இந்திய நடிகைகளுடன் நடிப்பதை அடியோடு தவிர்த்து வருகிறார்கள் முன்னணி தமிழ் நடிகர்கள். முடிந்தவரை, காதல் காட்சிகளை சில நாட்கள் தள்ளி எடுத்தால் போதும் என்று இயக்குநர்களிடம் கூறிவருகிறார்களாம்.

சமீரா ரெட்டி மும்பைக்கே போகாமல் சென்னையிலேயே தங்கியிருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X