twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குசேலனுக்கு வரவேற்பில்லை?

    By Staff
    |

    Rajini
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் குசேலன் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காதது அதன் தயாரிப்பாளர்களையும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    மலையாளத்தில் மம்முட்டி, சீனிவாசன், மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் கத பறயும் போள். படத்தின் கதையும் சீனிவாசன்தான். இப்படத்தின் நாயகன் சீனிவாசன். அவரது நண்பராக, சூப்பர் ஸ்டார் நடிகராக சிறிய வேடத்தில் நடித்திருந்தார் மம்முட்டி.

    அந்தக் கதையைத்தான் தமிழில் குசேலன் என்ற பெயரிலும், தெலுங்கில் கதாநாயகடு என்ற பெயரிலும் ரீமேக் செய்துள்ளனர். கே.பாலச்சந்தர், விஜயக்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பிரமிட் சாய்மீரா நிறுவனம் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.

    மலையாள ஒரிஜினல் கதையை ரஜினிக்காக அப்படியே மாற்றி ரஜினிக்கு அதிக முக்கியத்துவம் வரும் வகையில் திரைக்கதையை மாற்றி எடுத்தார் பி.வாசு. ரஜினி கேரக்டரை சாதாரணமாக காட்டினால் ரசிகர்களிடம் எடுபடாது என்ற நோக்கத்தில் அப்படி கதையில் மாற்றம் செய்யப்பட்டது.

    ஆனால் தற்போது படத்திற்கு சரிவர வரவேற்பு கிடைக்காதது தயாரிப்பாளர்களையும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    ஆகஸ்ட் 1ம் தேதி ரிலீஸான குசேலன் இன்னும் பிக்கப் ஆகவில்லை என்று பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

    தியேட்டர்களில் காணப்படும் சிறிய கூட்டம் கூட ரஜினியின் தீவிர ரசிகர்களாகவே உள்ளனர். நடுநிலை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை பெரிய அளவில் காண முடியவில்லை.

    ரஜினி படத்திற்கு எந்தளவுக்கு கூட்டம் வருமோ, அந்தக் கூட்டத்தை குசேலன் தியேட்டர்களில் காண முடியவில்லை.

    பிரமிட் சாய்மீரா நிறுவன பிரதிநிதி ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், படம் இன்னும் பிக்கப் ஆகவில்லை என்பது உண்மைதான். ஆனால் லேட் பிக்கப் ஆகும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

    மலையாளத்தில் 3வது வாரத்திற்குப் பிறகுதான் கத பறயும் போள் பிக்கப் ஆனது. அதே கதைதான் இங்கும் நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    நகர்ப்புறங்களில் படம் ஓரளவுக்கு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. கிராமப் பகுதிகளில் வரவேற்பு இல்லை.

    மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இப்படத்தை நாங்கள் நேரடியாக ரிலீஸ் செய்திருக்கிறோம். அங்கு திருப்திகரமாக உள்ளது. மற்ற பகுதிகளில் நாங்கள் நேரடியாக விநியோகிக்கவில்லை. எனவே அங்குள்ள நிலவரம் குறித்து எங்களுக்குத் தெரியாது (?????)

    படத்திற்கு ரசிகர்கள் வருகிறார்கள். ஆனால் பொதுமக்கள் பெரிய அளவில் வந்தால்தான் ஒரு படம் ஹிட் ஆகும். அடுத்த வாரம் முதல் அது நடக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

    'ஆடி'யால் கூட்டமில்லையாம்-வாசு சொல்கிறார்:

    குசேலன் சரியாகப் போகவில்லை என்பதை இயக்குநர் பி.வாசுவும் மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு படத்தின் ரிசல்ட்டை 10 நாட்களில் கூறி விட முடியாது. பத்து நாட்கள் கழித்து பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

    தற்போது ஆடி மாதம் நடக்கிறது. பொதுவாக இந்த மாதத்தில் கோவில் விழாக்கள் நிறைய நடைபெறும். பெண்கள் அனைவரும் கோவில் விசேஷங்களில் கலந்து கொள்வார்கள். தற்போதுதான் விழாக்கள் எல்லாம் முடிந்துள்ளன.

    குசேலன் பெண்களுக்கான படம். எனவே இனிமேல்தான் கூட்டம் வரும். படத்திற்கு கூட்டம் திரண்டு வரும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

    ரூ. 20 கோடி நஷ்டம்?:

    குசேலன் படத்தை கவிதாலயாவிடமிருந்து பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ. 61 கோடிக்கு வாங்கியது. ஆனால் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காததால், அந்த நிறுவனத்திற்கு ரூ. 20 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதேசமயம், படத்தை நல்ல விலைக்கு விற்று விட்ட கே.பாலச்சந்தரின் கவிதாலயா மற்றும் செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X