ஜெமினி கணேசனின் வாழ்க்கை திரைப்படமானது

ஜெமினியின் மகள் கமலா செல்வராஜ் இப்படத்தைத் தயாரிக்க வெங்கடேசன் இயக்கியுள்ளார். தாயன்பன் இசையமைத்துள்ளார்.
இது ஒரு டாக்குமென்டரி போலவும் இல்லாமல், அதேசமயம், பொழுதுபோக்குத் திரைப்படம் போலவும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம். 2 மணி நேரம் படம் ஓடுமாம்.
ஜெமினி குறித்த ஒரு முழுமையான வரலாற்றுப் பதிவாக இந்தப் படம் அமைந்துள்ளது என்கிறார் இயக்குநர் வெங்கடேசன்.
முதல்வர் கருணாநிதி, கமல்ஹாசன், கே.பாலசந்தர், நடிகைகள் அஞ்சலிதேவி, சரோஜாதேவி, சவுகார்ஜானகி, நடிகர்கள் நாசர், சோ, பாடகி சித்ரா, கவியரசு வைரமுத்து ஆகியோர் ஜெமினி கணேசன் பற்றி பேசியிருக்கிறார்கள்.
ஜெமினி படம் குறித்து வெங்கடேசன் கூறுகையில், ஜெமினி கணேசன் என்பவரை, காதல் மன்னன் என்கிற ஒரு சிறு வட்டத்துக்குள் வைத்து பழகிவிட்டார்கள். அவருக்குள் இருந்த வெவ்வேறு முகங்கள், உலகம் அறியாதவை.
திரையுலகில் அவருக்கு எதிரிகளே இல்லை. அவருக்கு போட்டியும் கிடையாது. எம்.ஜி.ஆர், சிவாஜி என்கிற மலைகள் இடையே நுழைந்து, மூன்றாவது மலையாக உயர்ந்தவர்.
ஜெமினி குறித்த பல தெரியாத செய்திகளை இந்தப் படத்தின் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என்கிறார்.


Click it and Unblock the Notifications











