twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகனுக்கு லக் ரொம்ப முக்கியம்! - வாலி

    By Staff
    |

    Vali with Surya
    சினிமாவில் ஜெயிக்க லக் ரொம்ப முக்கியம். நடிப்பின் இமயம் சிவாஜி கணேசனாகவே இருந்தாலும் லக் இருக்கணும். நேரமும் அதிர்ஷ்டமும் இருந்தா வெற்றி தானா வரும் என்றார் வாலி.

    மலை மலை ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சூர்யா, தனது பேச்சின்போது இப்படிக் கூறினார்.

    எத்தனையோ முயற்சிகள் செய்தும் தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு அந்தஸ்தான இடம் கிடைக்காமல் போராடி வரும் அருண் விஜய்க்கு ஒரு செமத்தியான ரீ எண்ட்ரியாக அமைய வேண்டும் என்ற நோக்கில் அவரது மாமனார் டாக்டர் மோகனால் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் மலை மலை.

    ஆக்ஷன் மசாலா ஸ்பெஷலிஸ்ட் ஏ வெங்கடேஷ் இயக்க மணி சர்மா இசையமைக்க, வேதிகா நாயகியாக நடிக்கும் படம் இது. பிரபு, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம் நீண்ட நாட்களுக்குப் பின் கவிஞர் வாலி நடித்திருப்பதுதான்.

    படத்தின் பாடல்களை நடிகர் சூர்யா வெளியிட்டார். இவரும் அருண் விஜய்யும் முன்னாள் காலேஜ்மேட்ஸ், நண்பர்கள் வேறு.

    அருண் விஜய் குறித்து சூர்யா பேசியதாவது:

    "எங்களுக்கு நல்ல படம் கிடைத்தது... சீக்கிரம் மேலே வந்துவிட்டோம். கல்லூரியில் என்னை ராகிங் பண்ணி கலாட்டா பண்ணுவார் அருண். ஏராளமான திறமைகள் கொண்டவர். இந்தப் படம் அந்தத் திறமைகளை வெளியே கொண்டுவரும் அளவுக்கு அமையும்", என்றார் சூர்யா.

    வாலி பேசுகையில், "எந்த நடிகருக்குமே லக் ரொம்ப முக்கியம். சிவாஜி நல்ல நடிகர்தான். ஆனா அவர் பெரிய அளவுல க்ளிக் ஆனதுக்கு அதிர்ஷடமும் நேரமும் ரொம்ப முக்கியமா இருந்தது", என்றார்.

    விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், பெப்ஸி தலைவர் விசி குகநாதன், நடிகர் விஜயகுமார், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பன்னீர்செல்வம், திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் மற்றும் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

    படத்தின் தயாரிப்பாளர் மோகன், ஹேமந்த் மற்றும் மக்கள் தொடர்பாளர் டயமண்ட் பாபு ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X