மக்கள் டிவியில் ரஷ்ய படங்கள்
மக்கள் டிவியில் வரும் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்களில் இரு மிகச் சிறந்த ரஷ்ய படங்கள் திரையிடப்படுகின்றன.
மக்கள் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் உலக அளவில் பிரபலமான திரைப்படம் ஒன்று திரையிடப்படுகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் பிரபல பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய த திரி மஸ்கட்டர்ஸ் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ரஷ்யப் படம் ஞாயிறு மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
ரஷ்ய மொழியில் 1978ல் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய இந்த படத்தை ஜார்கி யுங்வால்ட் கில்கிவிச் இயக்கியுள்ளார். சிறந்த இசையால் உலக முழுவதும் பேசப்பட்ட இந்த படம் டார்டாக்னன் மற்றும் மூன்று வேட்டைக்காரர்கள் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை 6.03 மணிக்கு 'சாரி செய்யாத் தெருவில் ஒரு வசந்த காலம்' என்ற படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது. வேலை செய்யும் இளைஞன் படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் மாலை கல்லூரிகளில் படிக்க செல்கிறான். கல்லூரியில் படிப்பில் மீது ஆர்வம் ஆசிரியையின் மீது காதலாக மாறுவதாக என கதை செல்கிறது.
இந்த படத்தை மார்லென் குட்டிசெவ் மற்றும் பெலிக்ஸ் மைரோனர் ஆகியோர் இயக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











