twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நம்பியார்- 91'

    By Staff
    |

    M.G.Ramachandran with Nambiar
    தமிழ் திரையுலகின் பழம்பெரும் வில்லன் நடிகரான எம்.என்.நம்பியார் 91 வயதைத் தொட்டுள்ளார்.

    வில்லன் நடிப்பு என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் நம்பியார். வில்லத்தனமான சிரிப்பு, கனல் பறக்கும் வசனங்கள், இடி முழக்கமிடும் அவரது குரல், கட்டுமஸ்தான உடல் கட்டு, மின்னலென போடும் சண்டைகள், நிஜமாகவே மோசமான ஆளாக இருப்பாரோ என்று எண்ண வைக்கும் தத்ரூபமான நடிப்பு ஆகியவற்றால் தமிழ்த் திரையுலக ஹீரோக்கள் பலரையும் பல காலத்திற்கு 'நடுங்க' வைத்தவர் நம்பியார்.

    எத்தனையோ ஹீரோக்களுக்கு வில்லனாக நம்பியார் நடித்திருந்தாலும், அவரும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தால் அதன் ஸ்டைலே தனி. இருவரும் பேசும் வசனங்களிலும், சண்டைக் காட்சிகளிலும் பொறி பறக்கும். இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்.

    குறிப்பாக எங்க வீட்டுப் பிள்ளை. இப்படத்தில் நம்பியாரும், எம்.ஜி.ஆரும் அசத்தியிருப்பார்கள். வில்லத்தனத்தில் நம்பியார் கொடி கட்டிப் பறந்திருப்பார். கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரையே தூக்கி சாப்பிட்டிருப்பார் தனது நடிப்பால்.

    பழுத்த நடிகரான நம்பியார் தனது 91வது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் எளிமையாகக் கொண்டாடினார்.

    நம்பியார், கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 13 வயதில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த நம்பியார், 1919ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி கேரள மாநிலம் மஞ்சேரியில் பிறந்தவர்.

    1935ம் ஆண்டு தமிழ் மற்றும் இந்தியில் தயாரான பக்த ராமதாஸ் படத்தின் மூலம் திரைப்பட நடிகரானார். அப்படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தார்.

    ஆரம்பத்திலிருந்தே வில்லன் ரோல்களில் நடித்து வந்ததால், அந்த கேரக்டரின் பல்கலைக்கழகமாகவே மாறிப் போய் விட்டார் நம்பியார். விதம் விதமான வில்லத்தனங்களுக்கு நம்பியார்தான் அகராதி.

    டி.எஸ். பாலையா முதல் எம்.ஜி.ஆர், சிவாஜி வரை, ரஜினி, கமல் முதல் இன்றைய இளம் தலைமுறையான விஜய், விக்ரம் வரை கிட்டத்தட்ட 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்த சாதனைக்குரியவர் நம்பியார்.

    சினிமாவில்தான் நம்பியார் வில்லன். நிஜத்தில் பெரிய ஹீரோ. ஒரு ஹீரோவுக்கு இருக்க வேண்டிய அத்தனை நல்ல பழக்கங்களும் நம்பியாரிடம் உண்டு.

    புகை, மது என எந்தப் பழக்கமும் அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை. சுத்த சைவம். ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டவர். தேகப் பயிற்சியை தவறாமல் செய்பவர். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 65 ஆண்டுகளாக போன பெருமைக்குரியவர். இதனாலேயே அவருக்கு மகா குருசாமி என்ற பெயரும் வந்தது.

    நம்பியாருக்கு வாழ்த்துக்கள்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X