இலக்கணப் பிழை: கற்பு.. நட்பு.. காதலின் மீறல்கள்!

கற்பு, காதல், நட்பு இவற்றின் இலக்கண மீறல்களை மையமாக வைத்து, புதிய திரைக்கதை அமைப்புடன் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கண மீறலால் ஆட்டோ ஓட்டும் இளைஞன் ஒருவன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதே கதை.
வால்பாறை காட்டுப் பகுதிகளில் தொடர்ந்து 30 நாட்கள் காட்டு யானை, காட்டு எருமை, சிறுத்தைகளின் அச்சுறுத்தலுக்கிடையே மிகவும் துணிச்சலுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.
கதாநாயகர்களாக ஆறுமுகம், சத்யா இருவரும் நடிக்க, இவர்களுக்கு ஜோடிகளாக கேரள வரவு சுவாதிஸ்ரீ, ரிஹானா இருவரும் அறிமுகமாகிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜோ இயக்கியுள்ளார்.
ரமேஷ் கே.பாபு ஒளிப்பதிவில், அருணகிரி இசையமைக்க, அல்லி வடமலை எடிட்டிங் செய்துள்ளார்.
விரைவில் இந்தப் படம் ரிலீசாகிறது.
Comments


Click it and Unblock the Notifications