திருத்தணி... திருவண்ணாமலை மற்றும் பேரரசு!

By Staff

Shamili with Perarasu
தொடர்ந்து ஊர்ப் பெயர்களையே தலைப்பாக வைத்து படம் எடுத்து வரும் இயக்குநர் பேரரசு தற்போது பரத் நடிக்க திருத்தணி என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை அடுத்து இவர் இயக்கப் போகும் படத்துக்கான தலைப்பை இப்போதே அறிவித்துவிட்டார். பெயர்: திருவண்ணாமலை!

பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்துக்காக இந்தப் படத்தை இயக்குகிறார் பேரரசு. ஆக்ஷன் கிங் அர்ஜூன்தான் ஹீரோ. பேரரசு படத்தில் நடிக்க வேண்டும் என்பது அர்ஜூனின் நீண்ட நாள் ஆசையாம்.

'ஆக்ஷன் படங்களை எடுப்பதில் பேரரசுவின் பாணி தனி. அந்த ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிவகாசி, பழனி போன்ற படங்களில் பேரரசுவின் வசனம், அதிரடி காட்சி அமைப்புகளைப் பார்த்து வெகுவாக ரசித்திருக்கிறேன். இப்போது அவர் இயக்கத்தில் நடிப்பது பற்றி பேசிக் கொணன்டிருக்கிறோம். எல்லா விஷயங்களும் முடிவான பிறகு சொல்கிறேன்... ' என்கிறார் அர்ஜூன்.

தனக்கும் ஒரு படம் பண்ணித் தரவேண்டும் என பேரரசுவே எதிர்பார்க்காத ஒரு நடிகர் கம் இயக்குநரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறதாம். அவர் வேறு யாருமல்ல... புதுமை விரும்பி பார்த்திபன்!

பார்த்திபன் படத்துக்கு அடி + தடி = அடிதடி என்று வித்தியாசமாக பெயர் சூட்டலாமே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X