twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் டிவியில் பொங்கல் ஸ்பெஷல்

    By Sudha
    |

    தைப் பொங்கலை சிறப்பாக வரவேற்க அட்டகாசமான நிகழ்ச்சிகளுடன் தயாராகி விட்டது விஜய் டிவி.

    ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களும் அதிரடி நிகழ்ச்சிகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ளது விஜய் டிவி.

    ஜனவரி 15

    காலை 6.30 மணிக்கு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி இடம் பெறுகிறது. 7 மணிக்கு பட்டிமன்றம் நடைபெறுகிறது. 8.30 மணிக்கு தூங்காநகரம் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் இடம் பெறும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். காலை 9 மணிக்கு காபி வித் அனு நிகழ்ச்சியில், நாகார்ஜுனாவும், பிரகாஷ் ராஜும் கலந்து கொண்டு உரையாடுகின்றனர்.

    காலை 10 மணிக்கு வில்லா டு வில்லேஜ். சின்னத்திரையைச் சேர்ந்த புகழ் பெற்ற ஐந்து ஜோடிகள் கலந்து கொள்கிறார்கள். கிராமம் ஒன்றில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு செமையாக கலாய்க்கிறார்கள் இவர்கள்.

    காலை 11 மணிக்கு கார்த்தியுடன் ஒரு சிறுத்தைப் பொங்கல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. நடிகர் கார்த்தியின் காமெடி கலந்த மறுபக்கத்தை ரசிகர்கள் இதில் பார்க்கலாம். அவருடன் நடிகை தமன்னா மற்றும் நடிகர் சந்தானமும் பங்கேற்கின்றனர்.

    பிற்பகல் 1 மணிக்கு நீயா நானா பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்றைய சினிமாவில் அழகுக்கு என்ன இலக்கணம் மற்றும் ஏன் கனவுக் கன்னிகள் இல்லை என்ற தலைப்புகளில் விவாதம் நடைபெறுகிறது. நடிகர்கள் ரேகா, குயிலி மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

    மாலை 3 மணிக்கு சூப்பர் ஹிட் திரைப்படம் சிக்கு புக்கு திரையிடப்படும். ஆர்யா, ஷ்ரேயா, ப்ரீத்திகா ஆகியோர் இதில் நடித்துள்ளனர். சந்தானம் காமெடியில் கலக்கியுள்ளார்.

    மாலை 6 மணிக்கு இளைஞர்களின் இளைஞன் நிகழ்ச்சி இடம் பெறும்.

    இரவு 7 மணிக்கு அது இது எது இடம் பெறுகிறது. இயக்குநர் சமுத்திரக்கனி, கேமராமேன் கதிர், நடன மாஸ்டர் திணேஷ் ஆகியோர் சிறப்புப் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். சிறப்பு விருந்தினராக இயக்குநர் சசிக்குமார் பங்கேற்கிறார்.

    இரவு 8 மணிக்கு ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி இடம் பெறுகிறது. சின்னத் திரை நட்சத்திரங்கள் ஸ்ரீவித்யா, ஸ்ரீதர் குழுவினரும், மீரா கிருஷ்ணன், கிருஷ்ணன் ஜோடியும் மோதுகின்றனர்.

    இரவு 9 மணிக்கு ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி.

    இரவு 10 மணிக்கு காதல் மீட்டர். நடிகை தேவயானியும், அவரது கணவர் ராஜகுமாரனும் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சுரேஷ் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

    ஜனவரி 16

    காலை 9 மணிக்கு நடிகர் ஆர்யாவுடன் ஒரு உரையாடல். 11 மணிக்கு கல்யாண வைபோகம்.

    பிற்பகல் 1 மணிக்கு விஜய் முகம். 3 மணிக்கு சூப்பர் ஹிட் தமிழ்த் திரைப்படம் அய்யனார் ஒளிபரப்பாகும்.

    ஜனவரி 17

    காலை 7 மணிக்கு சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி.

    11 மணிக்கு மம்முட்டி, மீரா ஜாஸ்மின், ரம்யா கிருஷ்ணன், நரேன் நடித்துள்ள ஒரே கடல் திரைப்படம் ஒளிபரப்பாகும்.

    பிற்பகல் 2 மணிக்கு இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் ஆதி, நந்தா, சிந்து மேனன் நடித்த ஈரம் திரைப்படம் ஒளிபரப்பாகும்.

    English summary
    ‘Thai Pongal’ is a harvest festival event celebrated by Tamilians across the world. Traditionally celebrated at the time of harvest, Pongal is a festival of prosperity associated with harvest by thanking the Sun God, rain and the farm animals that have helped in the harvest. Celebrating this festive occasion, Vijay TV has lined-up some exciting shows on January 15 (day of Pongal), January 16 (Maatu Pongal) and January 17, 2011.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X