ஏ.ஆர். ரஹ்மான் மீது ரஜினி அதிருப்தி?

ரஹ்மானின் இசை எந்த அளவு பிரபலமோ, அதே அளவு அந்த இசையைத் தருவதில் ரஹ்மான் செய்யும் தாமதமும் பிரபலம்.
சௌந்தர்யா தன் தந்தை ரஜினியை வைத்து இயக்கிவரும் அனிமேஷன் படமான சுல்தான்-தி வாரியருக்கு ரஹ்மான்தான் இசையமைக்கிறார். இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெறுவதாக சௌந்தர்யா கூறியிருந்தார். ஆனால் இதுவரை இரண்டு பாடல்கள்தான் முடிந்திருப்பதாக்க் கூறுகிறார்கள்.
மீதிப் பாடல்களைத் தருவது குறித்து ரஹ்மான் இன்னும் பதிலே கூறவில்லையாம்.
ஒருமுறை பாடல்கள் குறித்துப் பேச வேண்டும் என ரஹ்மானிடம் சௌந்தர்யா நேரம் கேட்க, அவர் அதிகாலை 4 மணிக்கு வருமாறு கூறினாராம். இதனால் அதிருப்தியடைந்த சௌந்தர்யா ரஹ்மானைப் பார்க்கவில்லையாம்.
இதுகுறித்து ஒரு விழாவில் பேசிய ரஜினி, ரஹ்மான் இரெவல்லாம் பணியாற்றக் கூடியவராக இருக்கலாம். ஆனால் அதிகாலை 4 மணிக்குப் போனால்தான் அவர் பாடல் போட்டுத் தருவார் என்றால் சௌந்தர்யா மாதிரி இயக்குநர்களுக்கு அது எவ்வளவு சிரமமாக இருக்கும்... என்றாராம் ரஜினி.
தனது வருத்தத்தை அவர் மற்ற நண்பர்களிடமும் கூற, இப்போது, சுல்தானுக்கு பாடல்கள் தருவதில் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளாராம் ரஹ்மான்.


Click it and Unblock the Notifications











