68வது பிறந்த நாள்: அமிதாப்புக்கு ரஜினி வாழ்த்து!

By Chakra

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இன்று தனது 68-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.

இன்று மாலை மும்பையில் பிரமாண்ட விருந்துக்கும் பிறந்த நாள் விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரஜினி கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்திப்பட உலகில் இன்றும் முதலிடத்தில் உள்ளவர் அமிதாப் பச்சன். 68 வயாதாகும் இவர் சமீபத்தில் 13 வயது சிறுவனாக நடித்த பா படம் உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. டி.வி.யில் குரோர்பதி நிகழ்ச்சியை தொடர்ந்து பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி மொழிகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இப்போது தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் நடிக்கவும் ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று அவரது 69வது பிறந்த நாளையொட்டி, காலையிலேயே அமிதாப்பச்சன் வீட்டின் முன்னால் ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்றனர். 69 கிலோ எடையுள்ள கேக்கை அவருக்கு ரசிகர்கள் வழங்கினர்.

அவர்கள் மத்தியில் அமிதாப்பச்சன் பேசும்போது, "எனது மனதையும் உடம்பையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்கிறேன். கெட்ட சிந்தனைகளை எனக்குள் நான் அனுமதிப்பதே இல்லை. இதனால்தான் இன்னும் நான் மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியோடும் இருக்கிறேன். உங்களை மகிழ்விப்பது மட்டும்தான் என் ஒரே நோக்கம். எனக்கு அது மட்டும்தான் தெரியும்," என்றார்.

ரஜினி வாழ்த்து

அமிதாப்புக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இமயமலை செல்லும் முன் மும்பை சென்றுள்ள அவர், அமிதாப் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார். சில சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

மாலையில் மும்பையில் நடக்கும் அமிதாப்பின் பிறந்த நாள் விழா விருந்திலும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X