'ராமன் ராவணன்' மலையாளப் படம்-தமிழகத்தில் ரத்து!

சுரேஷ் கோபி நடித்த மலையாளப் படம் ராமன் ராவணன். இந்தப் படம் இன்று வெள்ளிக்கிழமை சென்னை மற்றும் கேரளாவில் ஒரே நேரத்தில் வெளியாக இருந்தது.
ஆனால் இந்தப் படம் விடுதலைப் புலிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது புகார் எழுந்தது. தமிழர்களைக் கொலை வெறியர்களாகவும், சிங்களர்கள் புத்தரின் வாரிசுகள் என்றும் வசனம் இடம் பெற்றிருந்தது.
இதைச் சுட்டிக் காட்டிய நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தப் படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது என்றும், மீறித் திரையிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று அந்தப் படம் வெளியாகவில்லை. ஆனால் கேரளாவில் வெளியானது.
More from Filmibeat
சீமான் போராட்டம் சுரேஷ் கோபி திரையிடுவது நிறுத்தம் மலையாளப் படம் ராமன் ராவணன் விடுதலைப் புலிகள் ltte malayalam film seeman protest suresh gopi


Click it and Unblock the Notifications











