ரம்யா-நவ்யா-கஜாலா-கார்த்திகா-விமலா

By Staff

Gajala
மோசர்பெயர் நிறுவனம் தன்னந்தனியாக தயாரிக்கும் முதல் தமிழ்ப் படம் ராமன் தேடிய சீதை. ஐந்து நாயகிகளுடன் சேரன் நடிக்கும் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யை வைத்து புதிய கீதை, நந்தாவை வைத்து கோடம்பாக்கம் என இரு படங்களை இயக்கியவர் ஜெகன்னாத் (ஜெகன்ஜி எனவும் இவருக்குப் பெயர் உண்டு). ராமன் தேடிய சீதையையும் இவர்தான் இயக்குகிறார்.

ஆட்டோகிராப் மாதிரி இப்படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்கிறார் சேரன். ஜெகன்னாத்தின் இயக்கத் திறமையையும் அவர் பாராட்டுகிறார்.

கதையில் என்ன புதுமை என்று ஜெகன்னாத்திடம் கேட்டதற்கு, படம் பார்க்கும் ரசிகர்கள், அடடே, இந்த கேரக்டர் நம்மைப் போலவே இருக்கிறதே என்று எண்ணுவார்கள். அந்த அளவுக்கு மிகவும் யதார்த்தமான, இயல்பான கேரக்டர்கள்தான் படத்தில் உள்ளன என்றார்.

கேரளத்து ரம்யா நம்பீசன் இப்படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அப்புறம் சேரனுடன் ஏற்கனவே இரு படங்களில் நடித்துள்ள நவ்யா நாயர் இருக்கிறார், கஜாலா இருக்கிறார், கார்த்திகாவும் உள்ளார். பொய் நாயகி விமலா ராமனும் படத்தில் உண்டு.

கேரியரில் வெற்றி பெற்ற இளைஞன், வாழ்க்கையில் தனக்குப் பொருத்தமான துணை அமையாமல் சிரமப்படுகிறான். பல பெண்களைத் திருமணம் செய்வதற்காகப் பார்த்தும் எதுவும் செட் ஆகவில்லை. அத்தனைப் பெண்களும் மாப்பிள்ளை பிடிக்கவிலலை என்று நிராகரிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதுதான் ராமன் தேடிய சீதை படத்தின் கதை.

படம் பார்ப்பவர்களை ரசிக்க வைப்பதோடு, பல கோணங்களில் யோசிக்கவும் வைக்குமாம்.

படத்தில் சேரனுக்கு அடுத்து பசுபதிக்கும் முக்கிய வேடம் உள்ளது. அதேபோல நிதின் சத்யாவும் சிறப்பான வேடத்தில் நடித்துள்ளார்.

யுகபாரதி, கபிலன், ஜெயந்தா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் கேமராமேனாக பணியாற்றுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X