மணிரத்னம் படத்திலிருந்து விலக ரிலையன்ஸ் முடிவு

அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய்- விக்ரம்- ப்ரியாமணி நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகிறது. தமிழில் அசோக வனம் எனும் பெயரில் வருகிறது இந்தப் படம். இந்தி, தெலுங்கில் ராவண் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ரூ.120 கோடியில் மணிரத்னத்துடன் இணைந்து தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருந்தது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம்.
ஆனால் சர்வதேச நிதி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு படத்தின் பட்ஜெட்டில் பாதியைக் குறைத்துக் கொள்ளுமாறு மணிரத்னத்துக்கு ரிலையன்ஸ் கடிதம் எழுதியது. இதுகுறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
ஆனால் இதனை ஏற்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார் மணி ரத்னம்.
இதனால் ரிலையன்ஸ் விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், முழு தயாரிப்புப் பொறுப்பையும் மணிரத்னமே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எதுவும் இப்போது கூறுவதற்கில்லை என மணிரத்னத்தின் அலுவலகத்தில் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கெனவே இதே பிரச்சினை காரணமாக கமல்ஹாசனின் மர்மயோகியை பிரமிட் நிறுவனம் தள்ளிப் போட்டது நினைவிருக்கும்.


Click it and Unblock the Notifications











