ஏப்ரலில் 'ரோபோட்' பூஜை!

ஐங்கரன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பு ரோபோட். இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு பெரும் பொருட் செலவில் இப்படத்தை உருவாக்கவுள்ளனர்.
இதற்கான போட்டோ செஷன் கடந்த மாதம் ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து அதை டிசைன் செய்யும் வேலையில் ரஜினியின் மகளும், ஆக்கர் ஸ்டுடியோ நிர்வாக இயக்குநருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தீவிரமாக உள்ளார்.
குசேலன் படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துக் கொடுத்து விட்டு ரோபோட் படத்திற்கு வருகிறார் ரஜினி. குசேலன் படத்திற்கு மொத்தமே 25 நாட்கள்தான் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த எழுத்தாளர் சுஜாதாதான் ரோபோட் படத்தின் ஸ்கிரிப்டை ரெடி செய்துள்ளார். மரணத்திற்கு முன்பே தனது வேலைகளை முடித்துக் கொடுத்து விட்டார் சுஜாதா. இதனால் அவரது மறைவால் பெரும் அதிர்ச்சியில் இருந்த ஷங்கர், சுஜாதா கொடுத்த ஸ்கிரிப்ட் படு பக்காவாக இருப்பதால் படத்தை சிறப்பாக கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











