பிரிட்டன் பல்கலை. வழங்கிய டாக்டர் பட்டம்- பெற்றார் ஷாருக்

கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் சிறப்பான சேவையாற்றியதற்காக ஷாருக் கானுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள வாஷிங்டன் மேபேர் ஹோட்டலில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் ஷாருக் கானுக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. இந்த ஹோட்டலை இந்தியரான ஜோகிந்தர் சிங் சங்கார் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஷாருக் கூறுகையில், இந்தப் பெருமை மிகு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களில் ஒருவராக என்னை நான் நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்யக் காத்திருக்கிறேன் என்றார் ஷாருக்.
Comments
இந்தியா சினிமா டாக்டர் பட்டம் பெட்போர்ட்ஷயர் பல்கலைக்கழகம் ஷாருக்கான் bedfordshire varsity cinema doctorate sharukh khan


Click it and Unblock the Notifications