ஷாலினி தங்கை ஷாமிலியும் ஹீரோயின் ஆகிறார்!

ஷாமிலிக்கு அறிமுகம் தேவையில்லை. படமெடுத்து ஆடும் பாம்புக்கு முன்னாள், அண்ணே அண்ணே... நாகராஜன்னே... எனப் பாட்டுப்பாடி அசத்தியவர்!.
அக்கா ஷாலினியைப் போலவே இவரும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மணிரத்னம் இயக்கத்தில் அஞ்சலி படத்தில் மனநலம் பாதித்த குழந்தையாக அறிமுகமாக அனைவர் மனதையும் கரைத்தவர்.
தொடர்ந்து மலையாளம், தமிழில் சில படங்களில் நடித்தார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் தபு, ஐஸ்வர்யா ராயின் தங்கையாக நடித்தார். அதன் பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
அவரை ஹீரோயினாக அறிமுகப்படுத்த ஏராளமான டைரக்டர்கள் முயன்றனர். ஆனால் ஆரம்பத்தில் மறுத்துவிட்டார் ஷாலினியின் அப்பா.
இப்போது தெலுங்கில் புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்க ஷாமிலியிடம் பேசியுள்ளனர்.
இந்தப் படத்தின் தொடக்க விழா சமீபத்தில்தான் நடந்தது. அப்போது கதாநாயகி யாரென்பதைக் கூறாமல் சஸ்பென்ஸ் வைத்துவிட்டனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
அதற்குள் ஷாமிலியின் சம்மதத்தைப் பெற்றுவிட முயன்ற இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு ஓரளவு வெற்றி கிடைத்துவிட்டதாகவே கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications