ஷில்பாவின் அழகு நிலையம் - திறந்து வைக்கும் ரேகா

Shilpa Shetty with Rekha
தான் தொடங்கும் மெடிஸ்பா ஐயோசிஸ் எனப்படும் அழகு நிலையத்தைத் திறந்து வைக்க வேண்டும் என பழம்பெரும் கவர்ச்சிக் கன்னி ரேகாவை கேட்டுக் கொண்டுள்ளாராம் ஷில்லா.

காலம் கடந்தும் கலையாத அழகுடன் இருப்பவர் ரேகா மட்டுமே. எனவே இந்த அழகு நிலையத்தைத் திறந்து வைக்க முழுத் தகுதி படைத்தவர் அவர் மட்டுமே என்கிறார் பூரிப்புடன் ஷில்பா.

இதுகுறித்து ஷில்பா ஷெட்டி தனது பிளாக்கில் எழுதுகையில், யாரை வைத்து எனது அழகு நிலையத்தைத் திறக்கலாம் என நீண்ட நேரம் யோசித்தேன். அப்போது அழகு மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டுமே இணைந்து, நிரம்பியிருக்கும் ஒரே நடிகை ரேகாதான் என்று நான் உணர்ந்தேன்.

அவரைப் போல அழகானவரை நான் பார்த்ததில்லை. உடல் ஆரோக்கியம், பிட்னஸ் என அனைத்திலும் அவர் கொள்ளை அழகு. எனவே அவர்தான் எனது அழகு நிலையத்தைத் திறக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

அவரை அணுகி நீங்கள் தான் திறக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன், அவரும் ஏற்றுக் கொண்டார். நானும், அவரும் நல்ல தொடர்பில் இருக்கிறோம். என் மீது பாசத்துடன் இருப்பவர் ரேகா. எனக்கும் அவருக்கும் இடையிலான இந்த நெருங்கிய பந்தத்திற்கு இருவரும் தென்னிந்தியர்களாக இருப்பதால் இருக்கலாமோ என்னவோ என்று உருகியுள்ளார் ஷில்லா.

34 வயதாகும் ஷில்பாவின் மெடிஸ்பா அழகு நிலையத்தை 57 வயதாகும் ரேகா திறந்து வைப்பது உறுதியாகி விட்டது. தொழிலதிபர் கிரண் பாவாவுடன் இணைந்து ஷில்பா இந்த அழகு நிலையத்தை உருவாக்கியுள்ளார். மும்பையின் கெர் பகுதியில் இதைத் திறக்கிறார்கள். மேலும் கிளைகள் அமைக்கும் எண்ணமும் உண்டாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X