சிம்ரன் திரையில் தர்மயுத்தம்

By Staff

Simran
தமிழ் சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பிரமிட் சாய்மிராவின் சிம்ரன் திரை நிகழ்ச்சியின் நான்காவது குறுந்தொடர் தர்மயுத்தம் ஜூன் 2-ம் தேதி தொடங்கியுள்ளது.

ஜெயா டிவியில் தினமும் இரவு 8-30க்கு ஒளிபரப்பாகும் இத்தொடரின் கதை மிக வித்தியாசமானது.

சிம்ரனின் தந்தை ஒரு விஞ்ஞானி. இவர் தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கும் மருந்தினை அபகரிக்க முயல்கிறது ஒரு கும்பல். அதன் விளைவு, பெரிய சூழ்ச்சி செய்து விஞ்ஞானியை ஒரு வழக்கில் சிக்க வைத்துவிடுகிறார்கள். அந்த சதியை முறியடித்து தனது புத்திசாலித்தனத்தால் தன் தந்தையைக் காப்பாற்றுகிறார் சிம்ரன்.

இந்தப் போராட்டத்தில் அவர் எதிர்கொள்ளும் சோதனைகளை விறுவிறுப்பாகப் படமாக்கியிருக்கிறார்களாம். மொத்தம் இருபதே எபிஸோடுகளில் இந்தக் கதையை முடித்திருக்கிறார்கள்.

மங்கை என்ற கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க, அவருடன் ஒய்.ஜி.மகேந்திரா, சுலக்ஷனா, மோகன் ஷர்மா, ஷ்யாம் கணேஷ் என சின்னத் திரைப் பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

செந்தமிழன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். அஸ்வின் பாஸ்கர் இயக்குகிறார். வசனம்: வெங்கடேஷ், ஒளிப்பதிவு: சீனிவாஸ், கிரியேட்டிவ் ஹெட்: சுபா வெங்கட்.

ரசிகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தினசரி இந்த தொடர் பற்றி சிறந்த விமர்சனம் எழுதி அனுப்பும் 5 ரசிகர்களுக்கு தலா 1 தங்கக் காசு வழங்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X