புதிய வார்ப்புகள்... புத்தம் புதிய இசை!!

By Staff

Bagyaraj and Santhanu
உலகப் புகழ்பெற்ற சொனாட்டான் இசையை தனது புதிய வார்ப்புகள் படத்துக்குப் பயன்படுத்துகிறார் இயக்குநர் பாக்யராஜ்.

ஜெர்மனியைச் சேர்ந்த சொனாட்டான் நிறுவனமும் சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளர், இயக்குநர் லேகா ரத்னகுமாரின் லேகா ஸ்டுடியோவும் இனைந்து இப்போது சென்னையில் புதிய லேகா சொனாட்டான் இசைப் பதிவுக் கூடத்தை துவங்கியுள்ளன.

இந்த ஸ்டுடியோவில் பின்னணி இசைச் சேர்ப்பு, சிறப்பு சப்தம் சேர்ப்பு என பல பணிகள் குறைந்த செலவில் செய்து தரப்படுகின்றன.

இந்த ஸ்டுடியோவில் இசைப் பதிவு செய்யப்படும் முதல் திரைப்படம் கே.பாக்யராஜின் புதிய வார்ப்புகள். இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து முழு வீச்சில் இசைச் சேர்ப்பு நடந்து வருகிறது. பாக்யராஜூம் அவரது மகன் சாந்தனுவும் இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து லேகா ரத்னகுமார் கூறியதாவது:

ஆரம்பத்தில் சொனாட்டானின் பதிவு செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளை மட்டும் விலைக்குக் கொடுத்து வந்தோம். இப்போது, இங்கேயே முழுமையான அனைத்து வசதிகளும் கொண்ட ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளோம். இந்த ஸ்டுடியோவிலேயே ஒரு படத்துக்கு முழு பின்னணி இசையையும் சிறப்பு சப்தங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். கட்டணம் குறைவுதான். பாடல்களை ஒரு இசையமைப்பாளரும், பின்னணி இசையமைப்பாளரும் கவனிக்கும் முறை இப்போது வந்துவிட்டதால், பட அதிபர்களுக்கு இந்த ஸ்டுடியோ ஒரு வரப்பிரசாதமாகும், என்றார்.

சாந்தனு பேட்டி:

இந்த பேட்டியின்போது உடனிருந்த புதிய வார்ப்புகள் நாயகன் சாந்தனு கூறியதாவது:

படம் முழுவதுமாக முடிந்துவிட்டது. சில பாடல்கள்தான் பாக்கி. இசைச் சேர்ப்புப் பணியும் முடிவடையும் கட்டத்தில் உள்ளது.

லேகா சொனாட்டான் ஸ்டுடியோவில் இசை சேர்ப்பது மிக எளிதாக உள்ளது. உண்மையில் இது ரெடிமேட் இசையல்ல. ஒவ்வொரு நாளும் புதுப்புது இசைத் தொகுப்புகள் சர்வதேச தரத்தில் வருகின்றன எங்கள் படத்துக்குத் தேவையான இசையை இங்குள்ள இசை லைப்ரரியிலிருந்து விருப்பத்துக்கேற்ப எடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறோம். நேரம், பணம் எல்லாமே மிச்சம். நல்ல தரமான இசை...

இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிகப் புதிய அனுபவம். சக்கர கட்டியில் நண்பர்களோடு இருந்தது போன்றஉணர்வு. ஆனால் இந்தப் படத்தில் ஒரு குருகுலத்தில் இருந்ததைப் போன்ற ஒரு அனுபவம் கிடைத்தது. இந்தப் படம் வந்த பிறகு என் தந்தை பாக்யராஜின் இன்னொரு பரிமாணம் உலகுக்குத் தெரியும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X