பெனாசிர் வேடத்தில் சுஷ்மிதா

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர்களான சயீத் அஜீஸ், ஹென்னா ராய் ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளனர்.
ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் இப்படம் தயாரிக்கப்படும். பாகிஸ்தானிலும், இங்கிலாந்திலும் படப்பிடிப்பு நடைபெறும்.
இப்படத்தில் நடிக்கவுள்ளதைத் தொடர்ந்து பெனாசிர் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்து அவர் குறித்து அறிய தொடங்கியுள்ளாராம் சுஷ்மிதா சென்.
மேலும் உருது மொழியையும் தெளிவாகப் பேசுவதற்கான பயிற்சியிலும் அவர் இறங்கியுள்ளார்.
முன்பே வரலாற்றுப் படங்களில் நடிக்க தனக்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறியிருந்தார் சுஷ்மிதா. இந்த நிலையில் பெனாசிரின் வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் அவர் பெருமகிழ்ச்சியுடன் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளாராம்.
Comments


Click it and Unblock the Notifications