மீண்டும் குசேலன் பஞ்சாயத்து!

By Staff

Rajini
குசேலன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டக் கோரி மீண்டும் தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதுதொடர்பாக வருகிற 13ம் தேதி சென்னையில் கூடி பேசவுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இப்படத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் குரல் கொடுத்தனர்.

இதை ஈடு கட்டாவிட்டால் ரஜினிகாந்த், கே.பாலச்சந்தர் படங்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் எனவும் எச்சரித்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடந்தது. ரஜினியும், தியேட்டர் உரிமையாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார். இதையடுத்து சமரசம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் குசேலன் விவகாரம் தலை தூக்கியுள்ளது.

நஷ்டத்திற்கு ஈடாக ரஜினிகாந்த் கொடுப்பதாக கூறியிருந்த தொகை சில தியேட்டர் உரிமையாளர்களுக்கு இன்னும் வரவில்லையாம். இதையடுத்து இதை வழங்கக் கோரி ரஜினியை வலியுறுத்த தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக விவாதிக்க தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் 13ம் தேதி சென்னையில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.கூட்டத்திற்கு தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அண்ணாமலை தாங்குகிறார்.

இக்கூட்டத்தில் குசேலன் நஷ்ட ஈட்டை விரைவில் வழங்க வேண்டும் என்று கோரி தீர்மானம் போடவுள்ளனர். இதுதொடர்பாக மேல் நடவடிக்கை இருக்குமா, அது தொடர்பாக தீர்மானம் போடப்படுமா என்பது குறித்து்த் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X