'உம்மா' நாயகன் விக்னேஷ்!

By Staff

Vignesh with Suguna
உலக நாயகனாக வேண்டும், சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று நடிகர்கள் எல்லாம் துடித்துக் கொண்டிருக்கையில், சத்தம் போடாமல் 'உம்மா' நாயகனாகி வருகிறார் விக்னேஷ்.

லிப் டூ லிப் முத்தத்திற்கு அதிபதி என்ற பெயரிலிருந்து கமல்ஹாசன் விடுபட்டு பல காலமாகி விட்டது. காலியாகவே உள்ள அந்த இடத்திற்கு வர பல ஹீரோக்கள் துடித்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் விக்னேஷ்வரன் என சமீபத்தில் பெயர் மாற்றம் செய்து கொண்ட விக்னேஷ், சத்தம் போடாமல் முத்தப் புரட்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

மலரினும் மெல்லிய படத்தில் அவர் ஹீரோயின் வர்ஷினிக்குக் கொடுத்த உதட்டு முத்தம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் படம் போணியாகவில்லை என்பது வேறு விஷயம்.

இந் நிலையில், இப்போது இன்னொரு முத்தக் காட்சியில் நடித்து சூட்டைக் கிளப்பியுள்ளார் விக்னேஷ். இந்த முறை விக்னேஷிடம் சிக்கியவர் புதுமுகம் சுகுணா.

குடியரசு என்ற படத்தில்தான் இந்த முத்த யுத்தம் நடந்துள்ளது. இருவரும் உதட்டோடு உதடு பொருத்தி முத்தமிடும்படி ஒருகாட்சி இருப்பதாக விக்னேஷிடம் கூறியுள்ளார் இயக்குநர் சபீர் உசேன். விக்னேஷ் நான் ரெடி என்று கூற சுகுணாதான் தயங்கியுள்ளார்.

பிறகு சபீரும், விக்னேஷும் ஆறுதல்படுத்தி, விளக்கி முத்தக் காட்சிக்கு அவரை தயார்படுத்தினர். அதன் பின்னர் தைரியம் வந்து முத்தக்காட்சியில் நடிக்க சம்மதித்தாராம் சுகுணா.

பின்னர் அந்த முத்தக் காட்சியை படமாக்கினார் சபீர். முதல் டேக்கில் சீன் ஓ.கே. (யாருக்கு? .. யாருக்கோ!) ஆகவில்லை. இதையடுத்து 2வது டேக் போனார்கள். அதில் பொருத்தமாக வந்து விட்டதாம் காட்சி.

சும்மா சொல்லக்கூடாது. முதலில் தயங்கிய சுகுணா, முத்தம் கொடுத்த போது ஏகத்திற்கும் ஒத்துழைத்து, தத்ரூபமாக காட்சி அமைய உதவினாராம்.

சென்சார் கத்திரிகளின் 'முத்தத்திலிருந்து' தப்புமா விக்கி - சுகுணா முத்தம்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X