விஜய் படத்தைத் தயாரிக்கிறார் பிரகாஷ் ராஜ்!

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
என்னுடைய டூயட் மூவீஸ் சார்பில் தயாரிக்கப்படும் ஒரு படத்தில் நடிக்க விஜய் ஒப்புக் கொண்டுள்ளார். இது ஏற்கெனவே பேசி வைக்கப்பட்ட விஷயம்தான். இப்போது மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், அவ்வளவுதான். விரைவில் முழு அறிவிப்பையும் வெளியிட உள்ளேன்.
தமிழில் வில்லு, சச்சின் படத்தை இயக்கிய ஜான் இயக்கும் புதிய படம், என்னுடைய அபியும் நானும், ராடன் நிறுவனம் தயாரிக்கும் படம், இந்தியில் சல்மான் கானுடன் ஒரு படம் என பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது என் திரைப்பயணம்.
அபியும் நானும் பாடல் கேசட் வெளியீட்டு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது. நிறைய பத்திரிகைகளில் இந்த செய்தியைப் படித்திருப்பீர்கள். அது உண்மைதான். முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார். அவர் மகள் கனிமொழி பெற்றுக்கொள்கிறார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்துள்ள 'கஞ்சீவரம்' படம் டொரன்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
அதில் பங்கேற்க இப்போது கனடா செல்கிறேன். அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் நடக்கும் போட்டியிலும் இப்படம் பங்கேற்கிறது. கொரியா விழாவிலும் திரையிடப்படுகிறது.
எனக்கு பெரிய படம், சின்னப்படம் என்ற பேதம் கிடையாது. என் நடிப்புக்கு யார் தீனி போடுகிறார்களோ அவர்களின் படத்தில் நன்றாக நடிக்க முடியும். நான் வெறும் கல். டைரக்டர்கள்தான் சிற்பிகள். அவர்கள் எப்படி செதுக்குகிறார்களோ அதுபோல் ஆகிறேன்.
தோஸ்த் படத்துக்கு பிறகு பந்தயம் படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.
அபியும் நானும் பட ரிலீசுக்கு பிறகு நான் தயாரிக்கும் மயிலு வெளிவரும்.
இனிது இனிது படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடக்கிறது, என்றார் பிரகாஷ்ராஜ்.


Click it and Unblock the Notifications











