களவாணி சர்குணத்துடன் இணைகிறார் சீயான் விக்ரம்?

By Mayura Akilan

களவாணி, வாகை சூடாவா போன்ற படங்களை இயக்கிய சற்குணத்தின் அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் செய்திகள் உலாவருகின்றன. சமீபத்தில் விக்ரமும், சர்குணமும் சந்தித்து பேசியதை அடுத்தே இந்த செய்தி தமிழ் திரை உலகில் பரவி வருகிறது.

'வாகை சூட வா' படத்தின் மூலம் திரைப்பட விமர்சகர்களின் அதீத பாராட்டைப் பெற்றவர் சற்குணம். அடுத்ததாக அவர் என்ன படம் இயக்க இருக்கிறார் என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் கலைப்புலி தாணுவுக்கும், அம்மாகிரியேஷன்ஸ் சிவாவுக்கும் அடுத்தடுத்த படங்களை இயக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சர்குணம் கூறியுள்ளார். அதில் ஒன்று அதிரடி நிறைந்த ஆக்சன் கதை என்றும் மற்றொன்று மென்மையான காதல் கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விக்ரம் நடிக்கிறார்?

தாணுவுக்கு ஆக்சன் படம் இயக்க உள்ளதாக கூறிய சர்குணம், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் தயாராக உள்ளதாக கூறியுள்ளார். இரண்டிலுமே முன்னணி கதாநாயகர்கள் நடிக்க இருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்மா கிரியேசன்ஸ் சிவாவிற்கு காதல் கதை இயக்க உள்ளதாக கூறிய அவர் இரண்டு படங்களில் எதை முதலில் இயக்க இருக்கிறேன் என்பது பற்றி பொங்கலுக்குப் பிறகு முறையான அறிவிப்பு வரும். " என்று தெரிவித்தார். இதில் எந்த படத்தில் சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது.

More from Filmibeat

Read more about: vikram விக்ரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X