வில்லு: 15-ம் தேதி இசை வெளியீடு

அய்ங்கரன் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஆரம்ப பாடல் மட்டும்தான் பாக்கியாம்.
இதற்கான படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நேற்று துவங்கியது. மகனை இழந்த சோகத்தில் தவித்த இயக்குநர் பிரபு தேவா, நேற்று தனது துயரத்தையும் மீறி இந்தப் படப் பிடிப்பில் பங்கேற்றார். விஜய் நடித்த பாடல் காட்சியைப் படமாக்கினார். இன்னும் சில தினங்களில் இந்தப் பாடல் காட்சி முடிந்துவிடும்.
பொங்கல் வெளியீடான வில்லு படத்தின் பாடல்கள் வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகின்றன. இதற்காக சென்னையில் மிகப் பெரிய விழாவுக்கு ஐங்கரன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
விஜய்யின் ஜோடியாக இந்தப் படத்தில் நயனதாரா நடிக்கிறார். நெப்போலியன் மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications