ரஜினி மேஜிக்... 12.12.12!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 பல ஆச்சரியங்களுடன் பின்னிப் பிணைந்திருப்பதால் அதை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

நூற்றாண்டுக்கு ஒரு முறை அமையும் அபூர்வ தேதி
சூப்பர் ஸ்டாரின் மறக்க முடியாத பிறந்த நாளாக மலருகிறது வரும் 12.12.12. ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே அமையும் அபூர்வ தேதி இது.

சிறப்பான கொண்டாட்டத்திற்குத் தயாராகும் ரசிகர்கள்
உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள், இந்தப் பிறந்த நாளை தங்களால் முடிந்த அளவு சிறப்பாகக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

சினிமா உலகமும் தயாராகிறது
தமிழ் சினிமா உலகமும், ரஜினிக்கு மரியாதை செய்யும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த நேரத்தில் இன்னொரு ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டினால் 36.. சினிமாவுக்கு வந்தும் 36 ஆண்டுகள்
ரஜினிக்கு இந்த ஆண்டு வருவது 63 வது பிறந்த நாள். அவரது பிறந்த நாள் அமையும் தேதி 12.12.12. இந்த மூன்றையும் கூட்டினால் 36 வருகிறது (12+12+12). ரஜினி சினிமாத் துறைக்குள் காலடி வைத்து 36 ஆண்டுகள் ஆகின்றன!

திருப்பிப் போட்டால் 63
இந்த 36-ஐ திருப்பிப் போட்டால், அவரது வயது 63 வந்துவிடுகிறது. இது ஒரு தன்னிச்சையான ஒற்றுமையாக இருந்தாலும், வேறு எந்த நடிகருக்கும் அல்லது தலைவருக்கும் அமையாத ஒரு அபூர்வ விஷயம் என்பதால், இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிவாஜி 12.12.12
இந்தத் தேதிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உலகமெங்கும் 1500 அரங்குகளில் மிகப் பிரமாண்டமாக வெளியாகிறது சூப்பர் ஸ்டாரின் ப்ளாக்பஸ்டர் படமான சிவாஜி - த பாஸ் 3 டி.


Click it and Unblock the Notifications











