'அபிராமி'யின் பஞ்சாமிர்தம்!

அடிமைச்சங்கிலி என்ற படத்தை பிரமாண்டமாக தயாரித்தவர் அபிராமி ராமநாதன். பின்னர் மாயாவி மாரீசன் உள்ளிட்ட டிவி சீரியல்களையும் தயாரித்துள்ளார். பின்னர் படத் தயாரிப்பில் அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில் பஞ்சாமிர்தம் என்ற புதிய படத்தை தொடங்குகிறார் அபிராமி. இப்படம் முழு நீள காமெடிப் படமாகும். நாளை ஏவி.எம். ஸ்டுடியோவில் பூஜை போடப்படுகிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் பலரும் இந்தப் பட பூஜையில் பங்கேற்கவுள்ளனர்.
நாசர் முக்கிய ரோலில் நடிக்கிறார். படத்தின் தொடக்க நாளிலேயே ஒரு பாடலைப் பதிவு செய்யவுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பிளட் ஸ்டோன் ஆங்கிலப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி ராஜூ ஈஸ்வரன் இப்படத்தை இயக்கவுள்ளார். சுந்தர்.சி.பாபு இசையமைக்கிறார். காசி விஸ்வநாதன் கேமராவைக் கையாளுகிறார்.
டிசம்பர் 2வது வாரத்தில் 'பஞ்சாமிர்தம்' ரசிகர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications











