கேரளாவில் இன்று முதல் சர்வதேச திரைப்பட விழா!

கேரள மாநில சினிமா அகடமி சார்பில், சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இது 13வது ஆணாடாகும்.
இந்த விழாவில் ஜெர்மன், ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா உள்ளிட்ட 53 நாடுகளில் இருந்து 182 படங்கள் 14 பிரிவுகளில் திரையிடப்படுகின்றன. இன்று துவங்கி டிசம்பர் 19ம் தேதி வரை இந்த விழா திருவனந்தபுரத்தில் உள்ள நியூ, தன்யா, கைரளி உட்பட 12 திரையரங்குகளில் நடைபெறுகிறது.
சிறந்த படத்திற்கு முதல் பரிசாக ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது. இரண்டாவது மூன்றாவது பரிசுகளாக முறையே ரூ. 3, ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.
துவக்க விழாவில் சத்யஜித்ரேவின் ஜலசாகர், ராமச்சந்த் பாகிஸ்தான் படங்கள் திரையிடப்படுகின்றன.
அடையாளங்கள், ஆகாசகோபுரம் ஆகிய மலையாளப் படங்கள் போட்டிப் பிரிவில் இடம் பெறுகின்றன. துவக்க நாள் விழாவில் நடிகை கே.ஆர்.விஜயா கெளரவிக்கப்படுகிறார். இவரது பூர்வீகம் கேரளா என்பதால் இந்த மரியாதை அவருக்கு வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











