அடடா என்ன அழகு!

ரோஜா மலரே என்ற படத்தின் மூலம் இயக்குநரானவர் டிஎம் ஜெயமுருகன். ஜெய் ஆகாஷ் (...ஸாரி பெயரை மாத்திட்டாராம்... புதுப் பெயர் ஆகாஷ் ஜெய். எல்லாம் நியமராலஜி படுத்தும்பாடு!!) நிக்கோல் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்குத் தயாராகி நிற்கிறது.
கருணாஸ்- சரத்பாபு மற்றும் மறைந்த ரகுவரன் நடித்துள்ள இந்தப் படம் குறித்து இயக்குநர் ஜெயமுருகன் நேற்று கூறியதாவது:
குடும்பம், கல்லூரி, அரசியல், வன்முறை என எத்தனையோ களப் பின்னணியில் படங்கள் வந்துள்ளன தமிழில். ஆனால் தேசப்பற்றையும் காதலையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இன்றைய தலைமுறையில் அடடா என்ன அழகாகக்தான் இருக்கும். மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிர் நீத்த வீரர்களின் மாவீரர்களை நினைவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் பாடல்கள் பெரிய பலம், என்கிறார் ஜெயமுருகன்.
அனைத்துப் பாடல்களையும் ஜெயமுருகனே எழுதியுள்ளாராம். அதுமட்டுமல்ல, ஜீவன் தாமஸுடன் இணைந்து படத்துக்கு இசையும் அமைத்துள்ளார் ஜெயமுருகன்.
செலவைப் பற்றிக் கவலைப் படாமல் பாடல் காட்சிகளை பிரமாண்டமாக எடுக்கச் சொல்லி தயாரிப்பாளர் திருப்பூர் கருணாம்பிகா கௌரி ராமசாமி சொல்லிவிட்டதால், ஒவ்வொரு காட்சியிலும் ஆடம்பரம் மிரட்டுகிறதாம்.
பிப்ரவரி 14 காதலர் தின ஸ்பெஷலாக வருகிறது அடடா என்ன அழகு.


Click it and Unblock the Notifications











