என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்'

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரி வருகின்றன. அரசும் இதற்கு ஒப்புக் கொள்ளும் நிலை உள்ளது.
ஒருவேளை அப்படி சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, தனது சாதி என்ன என்று கேட்டால், இந்தியன் என்றுதான் சொல்வேன், என்று அமிதாப் பச்சன் தனது ப்ளாக்கில் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் எழுதியுள்ளதாவது:
எனது தந்தை கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சன், சாதி அமைப்புகள் மீது ஒருபோதும் நம்பிக்கை கொண்டதில்லை.
அதனால்தான் எனது தந்தை ஒரு சீக்கிய பெண்ணை (தேஜி பச்சன்) திருமணம் செய்து கொண்டார்.
நான் ஒரு பெங்காலி பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்( ஜெய பாதுரி).எனது சகோதரர் சிந்து பெண்ணையும், எனது மகள் பஞ்சாபியையும், எனது மகன்( அபிஷேக் பச்சன்) மங்களூர் பெண்ணையும் ( ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொண்டார்கள்..." என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











