பொய் சொல்லப் போறோம் - பாட்டு ரிலீஸ்

இயக்குநர் பிரியதர்ஷன் தமிழில் பொய் சொல்லப் போறோம் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படத்தை அவரது சிஷ்யரும், கிரீடம் படத்தின் இயக்குநருமான விஜய் இயக்குகிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயை நெருங்கி விட்டது.
பிரியதர்ஷனின் போர் பிரேம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும், யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. நாசர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அலைபாயுதே புகழ் கார்த்திக், நெடுமுடி வேணு ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
மலையாள பின்னணிப் பாடகர் எம்.ஜி.ஸ்ரீகுமார் இசையமைக்கிரார். அரவிந்த் கிருஷ்ணா கேமராவைக் கையாள, அந்தோணி எடிட்டிங்கைப் பார்க்க, முன்னாள் நடிகை காயத்ரி ரகுராம் நடனத்ைதக் கவனித்துள்ளார்.
--


Click it and Unblock the Notifications











