பாலாவுக்கு சௌந்தர்யா அட்வான்ஸ்?

இன்னொரு பக்கம் பாலாவே சொந்தமாக 4 படங்கள் தயாரிக்கப் போகிறார். அதில் மூன்று படங்களை வெளி இயக்குனநர்கள் இயக்கப் போகிறார்கள் என்றும் ஒரு பரபரப்பு உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்த இந்த இரண்டு 'கதை'களில் எது உண்மை?..
பாலாவிடமே கேட்டுவிட்டோம்... சின்ன சிரிப்புக்குப் பின் பேசியவர்,"ரஜினியை நான் பார்த்ததும் அதற்கு ஒரு 'கதை', சூர்யா என்னைப் பார்த்ததும் அதற்கு ஒரு 'கதை', அடங்கமாட்டீங்களாப்பா...", என்றவர்
"நான் முன்பே சொன்னது போல, அடுத்த ஆறு மாதத்தில் புதிய படத்தைத் துவங்குவது உண்மைதான். ஆனால் தயாரிப்பாளர் யார், நடிகர்கள் யார் என்றெல்லாம் நானாகத்தான் சொல்லணும். அதுக்குள்ள இவங்களாகவே எழுதிக்கிட்டா எப்படி?".
"நான் எனது திரைப்படம் தொடர்பான எதையும் மறைவாகச் செய்பவனில்லை. பொறுமையாக இருங்கள். வருடத்துக்கு ஒரு படம் என் இயக்கத்தில் நிச்சயம் வெளியாகும். என் சொந்தப் படத் தயாரிப்பு பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. பார்க்கலாம்..." என்றார் பாலா.


Click it and Unblock the Notifications











