படத் தயாரிப்பில் பபிதா

எம்.ஜி.ஆர். காலத்து துணை நடிகர் ஜஸ்டின். இவரது மகள்தான் பபிதா. அப்பா, சண்டையில் பெரிய ஆள் என்றால், பபிதா கவர்ச்சியி்ல் கதி கலக்கியவர்.
கவர்ச்சி ஆட்டத்தில் ஒரு சுற்று சுற்றி வந்த பபிதா பின்னர் ரிட்டையர்ட் ஆனவர். தற்போது அவரது மகள் லக்ஷனாவும் ஒரு நடிகை.
நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட அவர் அதில் எடுபடவில்லை. இதனால் குத்தாட்டத்திற்கு இடம் மாறியும் அங்கும் எதுவும் தேறவில்லை.
இதற்கிடையே கடந்த இரு தேர்தல்களில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தும் வந்தார்.
இந்த நிலையில் தனது மகளது மார்க்கெட்டை ஸ்டெடி செய்வதற்காக அம்மா பபிதாவே சொந்தப் படம் எடுக்க முடிவு செய்து விட்டார். மகள்தான் நாயகியாம்.
படத்துக்கு காதலை மறந்தேன் என்று பெயரும் சூட்டியாகி விட்டது. இயக்குநர், ஹீரோ உள்ளிட்டோரை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











