குசேலன் ஆடியோ புதிய சாதனை!

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியோ உரிமையை ரூ. 2.25 கோடிக்கு பிக் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளதாக பரபரப்பாகப் பேசிக் கொள்கிறார்கள்.
இதுகுறித்து பிக் மியூசிக் நிறுவனம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிடவில்லை.
ரஜினி படத்தின் ஆடியோ உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்படுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால் வளர்ந்து வரும் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த ஒரு படத்தின் ஆடியோ உரிமை இவ்வளவு பெரிய விலைக்குப் போயிருப்பது இதுதான் முதல் முறை.
படத்தின் ஐந்து பாடல்களையும் (நாம் ஏற்கெனவே அந்தப் பாடல்களின் துவக்க வரிகளை செய்தியாகக் கொடுத்த்து நினைவிருக்கலாம்) கேட்ட ரஜினிகாந்த் பெரிதும் மகிழ்ந்து பிரகாஷ்குமாரைப் பாராட்டியிருக்கிறார்.
"திரை இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் புதுப்பாதை வகுத்த மாதிரி, நீங்களும் வித்தியாசமான இசையைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளீர்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் ரஹ்மானின் என்ட்ரி வித்தியாசமாக இருந்தது. அவரைப் போன்ற முனைப்புடன் இன்னும் வித்தியாசமான நீங்கள் வந்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்" என பிரகாஷ்குமாரை வாழ்த்தியிருக்கிறார் ரஜினி.
இம்மாதம் 25 அல்லது 30 ம் தேதி குசேலன் ஆடியோவை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் ஒராண்டு கால குத்தகை உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ.64 கோடிக்கு வாங்கியிருப்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











