சினிமா இருப்பது சுகமானதல்ல, வாய்ப்பு வந்தால் தூக்கம் வராது: நாசர்

நெய்வேலியில் நடந்த புத்தக கண்காட்சிக்கு நடிகர் நாசர் வந்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது:
சினிமாவில் வாய்ப்பு தேடுவது சுலபமானதாக இருக்கலாம். ஆனால், வாய்ப்பு கிடைப்பது அறிது. அப்படி வாய்ப்பு கிடைத்து விட்டால் நிம்மதியான தூக்கம் இல்லாமல் போய்விடும். சினிமா துறையில் இருப்பது சுகமானதன்று.
சினிமாவில் அரும்பாடு பட்டு கிடைத்த வாய்ப்பை எப்படி தக்க வைத்து கொள்வது என்று யோசித்தால் தூக்கமே வராது. சினிமா துறையில் உள்ள அனைவரும் செல்வந்தர்கள் இல்லை. 99 சதவிகிதம் பேர் நடுத்தர, கீழ்த்தர வகுப்பினை சேர்ந்தவர்கள்.
நான் இதுவரை 1000 புத்தகங்கள் படித்துள்ளேன். அவை என் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன உலகில் மனிதன் தனக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கி தனித்து வாழ்கிறான். அவ்வாறு இருக்கும் மனிதனுக்கு நட்புணர்வை ஊட்டுவது புத்தகங்கள்.
மனிதன் பொய் சொல்லலாம். ஆனால், புத்தகங்கள் உண்மையை தான் சொல்லும். நான் இந்த புத்தக கண்காட்சிக்கு நடிகராக வரவில்லை ஒரு புத்தக விரும்பியாக வந்துள்ளேன். நெய்வேலி அழகும், பசுமையும் கொண்ட நகரமாக உள்ளது என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











