உளியின் ஓசை: உணர்ச்சிவசப்பட்ட முதல்வர்

முதல்வர் கருணாநிதி 1960களில் எழுதிய சாரப்பள்ளம் சாமுண்டி என்ற கதைதான் இப்போது உளியின் ஓசையாக தயாராகியுள்ளது. தனது இடையறாத வேலைகளுக்கு நடுவிலும் இப்படத்தின் உருவாக்கத்தில் தனிக் கவனம் செலுத்தி வந்தார் முதல்வர்.
கீர்த்தி சாவ்லா, சுஜா, வினித், சரத்பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தை திருவொற்றியூர் எஸ்.பி.முருகேசன் தயாரித்துள்ளார். எழுத்தாளர் இளவேனில் முதல்முறையாக இயக்கும் படமிது. சரித்திரப் பின்னணியில் இசையும் கலையும் கொஞ்சும் காலச் சூழலில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா மிகுந்த கவனம் எடுத்து இசையமைத்துள்ளார்.
சோழ மன்னன் ராஜ ராஜனின் காதல் மற்றும் அவரது பெயரை இன்றும் சொல்லும் தஞ்சை பெரியகோயிலின் ரகசியங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி உளியின் ஓசை எடுக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த வாரம்தான் முடிந்த்து. உடனே படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை முதல்வர் தெரிவிக்க, உடனே சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
படத்தை பார்த்த முதல்வர், மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்தின் இறுதிக் காட்சி, தனது கதையின் சாரத்தைக் காப்பாற்றும் வித்தில் கவனத்துடன் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநரைப் பாராட்டினார் முதல்வர்.


Click it and Unblock the Notifications











