திட்டமிட்டபடி எந்திரன் படப்பிடிப்பு! தயாரிப்பாளர் தகவல்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரஜினியின் எந்திரன் படப்பிடிப்பின் அடுத்த கட்டம் எப்போது துவங்கும் என சில தினங்களுக்கு முன் ரஜினியே அறிவித்திருந்தார். வரும் நவம்பர் 16-ம் தேதி குல்லு மணாலியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு துவங்குவதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில்தான், சமீபத்தில் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் நிதி நெருக்கடி மற்றும் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக செய்தி பரவியது.
உடனே, எந்திரன் படத்துக்கும் நிதி நெருக்கடி எழுந்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணமுள்ளன.
இதுகுறித்து விசாரிக்க ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டோம். அதன் நிர்வாகிகள் கூறியதாவது:
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன் உலகளாவிய படம். இந்தியாவின் திரையுலக சாதனையாக சர்வதேச அளவில் பேசப்படப் போகும் படைப்பு.
அதன் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளில் எந்த சுணக்கமும் நேராமல் பார்த்துக் கொண்டு வருகிறோம். ஒவ்வொரு விஷயத்தையும் மிகுந்த சிரத்தையுடன் ஏற்பாடு செய்து வருகிறோம்.
இந்த நிலையில் இப்படி ஒரு செய்தியா... வதந்திகள் பற்றிக் கவலை வேண்டாம். எந்திரன் தொடர்பான அனைத்தும் திட்டமிட்டபடி மிகச் சரியாக நடக்கும்... என்றனர்.


Click it and Unblock the Notifications











