twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இரண்டாவது திருமணம் செய்து கொண்ட வனிதா மகன் மீது உரிமை கோரக்கூடாது!'- ஆகாஷ் வழக்கு

    By Chakra
    |

    Aakash
    சென்னை: மகன் விஜய ஸ்ரீஹரியை பராமரிக்கும் விஷயத்தில் வனிதா தலையிட தடைகோரி முன்னாள் கணவர் ஆகாஷ் தொடர்ந்த வழக்கில் வனிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகை வனிதாவுக்கும், நடிகர் ஆகாஷுக்கும் 10.9.2000 அன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி (வயது 9), ஜோவிகா (5) ஆகிய 2 குழந்தைகள் பிறந்தனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வனிதாவும், ஆகாஷும் விவாகரத்து பெற்றனர். மகன் ஸ்ரீஹரியை யார் பராமரிப்பது என்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே வழக்கு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகாஷ் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

    எனது 2 குழந்தைகளுக்காக நான் இதுவரை திருமணம் செய்யாமல் இருக்கிறேன். ஆனால் விவாகரத்து பெற்று 6 மாதங்களுக்குள், ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழும் ஆனந்தராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். மறு திருமணம் செய்ததால் குழந்தையை சந்திக்கும் உரிமையை அவர் இழந்துவிட்டார். நிரந்தர மாத வருமானம் இல்லாத ஆனந்தராஜன் தனது மனைவியை சட்டப்பூர்வமாக இன்னும் பிரியவில்லை. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் ஆனந்தராஜன் நடந்து கொள்கிறார்.

    விஜய்ஸ்ரீஹரியை அவர் கொடுமைப்படுத்துவதற்கு வனிதா தடை சொல்வதில்லை. விஜய்ஸ்ரீஹரியை சந்தித்து பேசியபோது இதையெல்லாம் அவன் கூறினான்.

    தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. என்னுடன் வசிப்பதையே விஜய்ஸ்ரீஹரி மிகவும் விரும்புகிறான். தாயார் வனிதாவுடன் வசிப்பதை விரும்பவில்லை என்பதை பத்திரிகை, டி.வி.களில் பேட்டியாக தெரிவித்துள்ளான். ஆனால் அவனை என்னிடம் இருந்து அபகரித்துக்கொள்ள வனிதா பல முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

    செகந்திராபாத் குடும்பநல கோர்ட்டில் அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு தற்காலிகமானதுதான். ஏனென்றால் அப்போதைய சூழ்நிலையில் அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. குழந்தையின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுக்கு ஏற்றபடி வழங்கப்பட்ட தீர்ப்பு அது. என்னுடன் குழந்தை நன்றாக வசிப்பதற்கு ஏற்ற வகையில் நல்ல வருமானம் வருகிறது. எனது 2 குழந்தைகளையுமே நான் என்னுடன் வைத்து பராமரிக்க முடியும். வனிதாவும், ஆனந்தராஜனும் அவர்களுக்கு பிறந்த குழந்தையை மட்டும் நன்றாக கவனித்துக்கொள்கின்றனர். என்னுடைய குழந்தைகளை மாற்றான்தாய் மனப்போக்குடன்தான் நடத்துகின்றனர்.

    எனவே கால சூழ்நிலை மாறிய நிலையில் விஜய்ஸ்ரீஹரி என்னுடன் வசிப்பதில் தலையிட வனிதாவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    மனுவுக்கு 18-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி வனிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

    English summary
    The Madras Family Court issued notice to Vanitha to give her explanation in her ex husband Aakash's case on maintaining their first son Vijay Srihari. In his petition Aakash told that there is no right to Vanitha to claim her rights over Vijay Srihari, since she had married with Aanandarajan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X