சூர்யா-ஜோ மகள் பிறந்த நாள்!

கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தாஜ் பிஷர்மென் கேவ் ஹோட்டலில் நடந்த இந்த விழாவில் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி, மகள் பிருந்தா, மகன் சூர்யா, மருமகள் ஜோதிகா மற்றும் அவர்களுக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தினர்.
ஜோதிகாவின் அக்காவும் குழந்தைக்குப் பெரியம்மாவுமான நடிகை நக்மாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஜோதிகாவின் தந்தை சந்தர் சதானா மற்றும் அவரது மும்பை உறவினர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
திரையுலகப் பிரமுகர்கள், கே.எஸ்.ரவிக்குமார், தரணி, கவுதம் மேனன் உள்பட பலர் வந்திருந்து வாழ்த்தினர்.


Click it and Unblock the Notifications











