இளையராஜாவின் 875 - வது படம்!!

34 ஆண்டுகளுக்கு முன்பு அன்னக்கிளியில் தொடங்கியது இசைஞானியின் இசைப் பயணம். இத்தனை ஆண்டு காலமும் திரை இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை என தான் தொட்ட எல்லாவற்றையும் துலங்க வைத்துக் கொண்டிருப்பவர் ராஜா.
தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் திரை இசையின் முன்னோடி எனப் புகழப்படும் ராஜா, இந்தியிலும் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்போதும் 4 இந்திப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
தற்போது தனது இசை குருவும் அண்ணனுமான மறைந்த பாவலர் வரதராஜன் மகன் ஜோ வரதராஜன் இயக்கும் புதிய படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் ராஜா.
இந்தப் படம் இளையராஜாவின் இசையில் வெளிவரும் 875-வது படமாகும்.
இதுகுறித்து ஜோ வரதராஜன் இப்படிக் கூறுகிறார்:
இந்தப் படம் என் சித்தப்பா இளையராஜா இசையில் உருவாகும் 875-வது படம். மற்றபடி அவரைப் பற்றிச் சொல்ல எனக்கு வயது போதாது.
நான் இதற்கு முன் ஆர்.வி.உதயகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். இப்போது விளையாடு ராஜா விளையாடு படத்தை இயக்குகிறேன்.
இதில் பிறப்பு பட புகழ் பிரபா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி மலையாள புதுமுகம். மனோரமா, நளினியுடன் மலையாள ஹீரோ ஒருவர் நடிக்கிறார். ப்ரண்ட்ஸ் ப்யூச்சர் பிலிம்ஸ் ஷாகீர் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங், அடுத்த மாதம் தொடங்குகிறது.
சிதம்பரத்தில் நடக்கும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை நேரடியாகப் படமாக்குகிறோம். தாமு ஒளிப்பதிவு செய்கிறார், என்றார்.


Click it and Unblock the Notifications











