twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நேயர்களின் 'பசியாற்றும்' டிவிகள்!

    By Chakra
    |

    Ritu Dalmia
    டிவிகளில் இப்போது புதிய வகை ஷோ படு பாப்புலராகியுள்ளது. அது சமையல் தொடர்பான நிகழ்ச்சிகள்.

    இந்தியாவைப் பொறுத்தவரை தூர்தர்ஷன் எனப்படும் அரசுத் தொலைக்காட்சிகள் சித்தா, ஹோமியோபதி மருந்து போல. அதாவது அதிரடி இருக்காது, அதேசமயம், தேவையான நிவாரணத்தைக் கொடுக்கும். ஆனால் தனியார் தொலைக்காட்சிகள் அப்படியே உல்டா. அலோபதி மருத்துவம் போல. ஒரே அதிரடிதான்.

    தனியார் டிவிக்களைப் பொறுத்தவரை எல்லாமே கடும் போட்டிதான். யாராவது ஒருவர் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்து விட்டால் போதும், அப்படியே காப்பி அடித்து வேறு விதமான பாணியில் மாற்றியமைத்து போட்டியை சமாளிப்பார்கள்.

    ஒரு காலத்தில் டிவி தொடர்கள் படு பாப்புலராக இருந்தன. டிவி தொடர்களைப் போட்டுத் தள்ளுவதில் ஒவ்வொரு சானலுக்கும் இடையே நிலவிய கடும் போட்டி மக்கள் அறிந்ததே.

    இப்போது ரியாலிட்டி ஷோக்களுக்குத்தான் கடுமையாக அடித்துக் கொள்கின்றன ஒவ்வொரு சானலும்.

    தமிழைப் பொறுத்தவரை ரியாலிட்டி ஷோ என்ற கான்செப்ட்டை ஆரம்பித்து வைத்ததே விஜய் டிவிதான். மற்றவர்களெல்லாம் சினிமா, சினிமா என்று கட்டியழ, விஜய் டிவி மட்டும் ரஜினி போல தனி வழியில் நடை போட்டு அசத்தியது.

    இன்று விஜய் டிவியில் வரும் கிட்டத்தட்ட அத்தனை ரியாலிட்டி ஷோக்களையும் பிற சானல்கள் காப்பி அடித்தும், உல்டா செய்தும், மாற்றியமைத்தும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

    அந்த வகையில் விஜய் டிவியில் அறிமுகமான ஒரு ஷோதான் சமையல் நிகழ்ச்சி. வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சியில் யாராவது ஒருவர் வந்து இப்படிச் சமைக்க வேண்டும்,இதெல்லாம் செய்யலாம், இதெல்லாம் செய்யக் கூடாது என்று லெக்சர் கொடுத்து விட்டுப் போய் விடுவார்கள். ஆனல் விஜய் இதை வித்தியாசமான நிகழ்ச்சியாக மாற்றி சுவையைக் கூட்டியது.

    இன்று தமிழகத்தின் அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் இந்த சமையல் நிகழ்ச்சி இப்போது பல்வேறு பெயர்களில் பல ரூபங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

    பிற ரியாலிட்டி நிகழ்ச்சிகளைப் போல இதுவும் ஒரு பாப்புலரான நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

    தமிழில்தான் இப்படி என்றில்லை இந்தியிலும் இதே கதைதான். கானா கஜானா என்ற பெயரில் பிரபல சமையல் கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் ஒரு நிகழ்ச்சியைத் தந்து வருகிறார். இத்தாலியன் கானா என்ற பெரில் ரீத்து டால்மியா தருகிறார். ராக்கி அன்ட் மயூர் இணைந்து ஹைவே ஆன் மை பிளேட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குனால் விஜயககர் ஃபூடி என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி கொடுக்கிறார்.

    அரவுன்ட் தி வேர்ல்ட் இன் 85 பிளேட்ஸ் என்று பெயரிலேயே மிரட்டுகிறார் மகந்தீப் சிங்.

    இந்த வரிசையில் இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் சமையல் ரியாலிட்டி ஷோவில் குதித்துள்ளார்.

    இப்படி இந்தியா முழுவதும் அனைத்து சானல்களிலும் சினிமாவுக்கு நிகராக சமையல் நிகழ்ச்சிகளும் சக்கை போடு போடுகின்றன. இதனால் விதம் விதமான உணவு வகைகளை பொதுமக்களும் தெரிந்து கொள்ள முடிவதால் அவர்களுக்கும் குஷிதான்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X