உலக அழகிப் போட்டி: இந்திய அழகி காயம்-பங்கேற்பாரா?

இதில் இந்தியா உள்பட 112 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக நடந்த பல சுற்றுப் போட்டிகளைத் தொடர்ந்து இன்று இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு இறுதிச் சுற்றுப் போட்டி தொடங்குகிறது.
இந்தியா சார்பில் இந்தப் போட்டியில் பூஜா சோப்ரா பங்கேற்கிறார். இதற்காக கடந்த 6 மாதமாக பூஜா பல்வேறு பயிற்சிகளை பெற்று வந்தார்.
தொடக்கச் சுற்றுப் போட்டிகளில் பூஜா மிகவும் சிறப்பான புள்ளிகளை பெற்றார். எனவே உலக அழகி பட்டத்தை வெல்லும் வாய்ப்புள்ள அழகிகளில் பூஜாவின் பெயரும் உள்ளது.
இந் நிலையில் நேற்று பூஜா ஜோகன்ஸ்பர்க்கில் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல் படிக்கட்டில் இறங்கி வந்தபோது அவர் அணிந்திருந்த ஹை-ஹீல்ஸ் செருப்பு வழுக்கி கால் தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவரது இடது கால் பிசகிவிட்டது. முழங்காலிலும் அடிபட்டதால் அவர் வலியால் துடித்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கால் பிசகி உள்ளதால் 3 வாரம் படுக்கையில் ஓய்வில் இருக்குமாறு மருத்துவமர்கள் அறிவுறுத்திவுள்ளனர். இதை கேட்டதும் பூஜா சோப்ரா கண்ணீர் விட்டு அழுதார்.
நடக்க முடியாவிட்டால் இன்றிரவு நடக்கும் போட்டியில் இருந்து அவர் விலக வேண்டி வரலாம். ஆனால், தான் விலகப் போவதில்லை என்றும் எப்படியாவது நிச்சயம் போட்டியில் கலந்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார் பூஜா.
அவர் கூறுகையில், 10 நொடிகள் என்னால் நடக்க முடிந்தால் போதும்.. நான் உலக அழகிப் போட்டி மேடையில் ஜமாய்த்துவிடுவேன். ஆனால், விதி என்ன செய்ய காத்திருக்கிறேதோ.. என்கிறார் பூஜா நம்பிக்கை கலந்த வருத்தத்துடன்.
காலில் அடிபட்டுள்ளதால் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன் நடக்கும் நடனப் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்று உலக அழகிப் போட்டியை நடத்தும் அமைப்பு அவருக்கு விதிவிலக்கு தந்துள்ளது.


Click it and Unblock the Notifications











