ஜெயசித்ராதான் எனக்கு ஜோடியா வேணும்!-பாலச்சந்தரின் விருப்பம்

இப்போது இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தாமிரா இயக்கும் ரெட்டைச் சுழி எனும் படத்தில் 'ஹீரோவாக' நடித்து வருகிறார் கே பாலச்சந்தர். இதில் இன்னொரு ஹீரோ இயக்குநர் பாரதிராஜா.
இந்தப் படத்தில் கேபிக்கு மட்டும் ஜோடி உண்டு. அந்த ஜோடியாக ஜெயசித்ரா நடிக்கிறார்.
சினிமா, அரசியல் என பல 'ரவுண்டு'கள் பார்த்துவிட்ட ஜெயசித்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம் இது.
இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறியதாவது:
கேபி சார்தான் சொல்லத்தான் நினைக்கிறேன் படம் மூலம் எனக்கு புதிய வாழ்க்கையைக் காட்டியவர். புதுப்புது அர்த்தங்கள் மூலம் என்னுடைய இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார்.
இப்போது மீண்டும் அவரே என்னுடைய நடிப்பு வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக ஜெயசித்ராவைப் போடுங்க... நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உள்ள 'பொண்ணு' (??!!), என படத்தின் இயக்குநரிடம் அவரே கேட்டுக் கொண்டது என் நடிப்பு மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது...", என்று உணர்ச்சிவசப்பட்டார் ஜெயசித்ரா.


Click it and Unblock the Notifications











