ஜெயபிரதா ஹோட்டல் அறையில் திடீர் சோதனை

By Staff

Jeyapradha
ராம்பூர்: நடிகையும், சமாஜ்வாடி கட்சி வேட்பாளருமான ஜெயபிரதா தங்கியிருந்த ஹோட்டல் அறையில் நேற்றிரவு உத்தரப் பிரதேச போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

ஜெயபிரதாவி்ன் புகழை களங்கப்படுத்த வேண்டுமென்றே இது போன்ற செயல்களை சிலர் செய்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உத்தர பிரேதச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியில் உட்கட்சி பூசல் பெரிதாகி கொண்டே போகிறது. கட்சியின் முக்கிய தலைவர்களான அமர்சிங்-அசம் கான் இடையே மோதல் உச்சகட்டத்தில் உள்ளது.

ஜெயப்பிரதாவை அமர் சிங் தான் ராம்பூர் தொகுதி வேட்பாளராக்கினார். இதை அசம் கான் ஏற்கவில்லை. இதையடுத்து ஜெயப்பிரதாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளார்.

அவரை நீக்கினால் கட்சிக்கு முஸ்லீம்களின் ஓட்டுக்கள் பாதிக்கப்படும் என்பதால் அமர்சிங், அசம் கான் இருவரையுமே கண்டித்து வருகிறார். இதையடுத்து தான் கட்சியை விட்டு விலகுவதாக அமர் சிங் மிரட்டினார். அவரை முலாயம் சமாதானப்படுத்தினார்.

அதே போல அசம் கானை சமாதானப்படுத்தும் வேலையை தனது நண்பரான லாலு பிரசாத்திடம் தந்துள்ளார். அவரும் கானுடன் பேசி வருகிறார்.

இதற்கிடையே தான் நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாச போஸ்டர்களை தொகுதி முழுவதும் அசம் கான் ஆதரவாளர்கள் ஒட்டி வருவதாக நேற்று அழுதபடியே புகார் தந்தார் ஜெயப்பிரதா.

இந்நிலையில் நேற்று இரவு உத்தரப் பிரதேச போலீசார் ஜெயபிரதா தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் புகுந்து சோதனை செய்துள்ளனர். அவர்கள் எதற்காக சோதனையிட்டனர் என்று தெரியவில்லை.

முதல்வர் மாயாவதியை தூண்டிவிட்டு அசம் கான் அந்த வேலையைச் செய்துள்ளதாக ஜெயபிரதா சந்தேகப்படுவதாகத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X