கந்தசாமி ஆடியோ ரிலீஸ் தள்ளி வைப்பு!

விக்ரம் - ஸ்ரேயா நடிக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது வரும் ஏப்ரல் 14-ம் தேதி ஆடியோ வெளியீடு பிரமாண்ட முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை டிரேட் சென்டரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை சன் டிவி நேரடியாக ஒளிபரப்பும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிலதொழில் நுட்ப காரணங்களுக்காக கந்தசாமி படத்தின் ஆடியோ வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 26-ம் தேதி, இந்த பிரமாண்ட இசை வெளியீட்டு விழா ஏற்கெனவே அறிவித்த இடத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் நிறைய கிராமங்களைத் தத்தெடுத்தல் உள்ளிட்ட பல நல்ல விஷயங்களும் இடம்பெற உள்ளன.
மே மூன்றாவது வாரத்தில் கந்தசாமி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகும் என்று தெரிகிறது.
Comments
audio release ஆடியோ வெளியீடு கந்தசாமி சினிமா தமிழ் தள்ளி வைப்பு cinema kandasamy postponement trailor


Click it and Unblock the Notifications