twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரளாவில் தியேட்டர்கள் மூடல்!

    By Staff
    |

    Malayalam film
    சினிமா கட்டண உயர்வைக் கண்டித்து கேரளத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் வருகிற செப்டம்பர் 16-ம் தேதி மூட சினிமா வெளியீட்டாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

    'தல சித்ர அகாடமி' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளது கேரள அரசு. இதன் சார்பில், சினிமா கலைஞர்களுக்கு நல நிதி வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கு பணம் திரட்ட, கேரள தியேட்டர்களில் டிக்கெட்டுக்கு கூடுதலாக 5 ரூபாய் வசூலித்து, அதை இவ்வாரியத்துக்கு கொடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வை தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் ஏற்கவில்லை.

    கேரள அரசின் முடிவைக் கண்டித்து வரும் 16-ம் தேதி, கேரளாவிலுள்ள 230 தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளனர். இதையடுத்தும் கட்டண உயர்வை, அரசு வாபஸ் பெறாவிட்டால், ஜனவரி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவோம் என கேரள சினிமா வெளியீட்டாளர்கள் சங்க தலைவர் லிபர்டி பஷீர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே பிற மொழி படங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது. பிற மொழி படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்கள், 'தலசித்ர அகாடமி'யில் பதிவு செய்யவேண்டுமாம். இதற்கு கணிசமான கட்டணம் உண்டு. அதை சினிமா கலைஞர்கள் நலநிதிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X