தேர்தல் பிரச்சாரத்தில் லட்சுமி ராய்!

By Staff

Lakshmi Roy
இப்போதெல்லாம் தேர்தல் நேரத்தில் நடிகர்-நடிகைகளின் கால்ஷீட் கிடைப்பதும் அரிதாகி வருகிறது. காரணம் திரைப்படங்களில் நடிப்பது போக, அரசியல் மேடைகளிலும் தோன்றி தொண்டர்களை மகிழ்விக்க வேண்டியுள்ளது.

வட இந்தியாவில் சூப்பர் ஸ்டார்கள் தொடங்கி சாதா ஸ்டார்கள் வரை தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாகிவிட்டார்கள்.

தென்னிந்தியாவில் ஆந்திராவில் நடிகர், நடிகையர் பிரச்சாரம் தூள் பறக்கிறது. தமிழகத்தில் இம்முறை நடிகர்-நடிகர்கள் பிரச்சாரம் இன்னும் சூடி பிடிக்கவில்லை.

ஆனால், கர்நாடகத்தில் சினிமா ஸ்டார்கள் அரசியல் மேடைகளை அலங்கரிப்பது சமீப காலமாக அதிகரித்துவிட்டது. இந்த அரசியல் ஜோதியில் இப்போது லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் லட்சுமி ராய். கிரிக்கெட் தோணி புகழ் அதே பெல்காம் பேபிதான்.

லட்சுமி ராய் இப்போது தனது தாய்மொழியான கன்னடத்திலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். பூர்வீகமும் கர்நாடகாதான் என்பதால் கர்நாடக மக்களவைத் தொகுதிகளில் அவரைப் பிரச்சாரம் செய்ய வைக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயன்றன.

கடைசியில் பகுஜன் சமாஜ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார் லட்சுமி ராய்.

பெங்களூர் மத்திய தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக விஜய்சிங் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகத்தான் நடிகை லட்சுமிராய் பிரச்சார களமிறங்கியுள்ளார்.

அத்தொகுதிக்குட்பட்ட சிவாஜி நகரில் வேட்பாளர் விஜய்சிங்குடன் சென்று அவருக்கு ஓட்டு கேட்டார். உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதியின் திட்டங்கள் தனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்வதாக லட்சுமி ராய் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X